செய்திகள் இந்தியா
25 ஏக்கரில் கல்லூரி... வெறும் 15 மாணவர்கள்; ரூ.289 கோடி விழலுக்கு இறைத்த நீர்: PDUIA-ன் அவல நிலை
காசியாபாத்:
இந்தியாவின் தொல்லியல் துறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம்', இன்று ஆள் நடமாட்டமில்லாத பாழடைந்த கட்டடம் போலக் காட்சியளிக்கிறது.
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில், ரூ.289 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட வளாகம் எப்படி இருக்கிறது என்பது குறித்து India Today குழுவினர் நேரில் ஆய்வு செய்து, கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அதில், ``வளாகத்தின் முகப்பில் உள்ள பிரமாண்ட பெயர்ப் பலகையிலேயே 'Upadhyaya' என்ற சொல்லில் 'U' எழுத்தும், 'Institute' என்ற சொல்லில் 'I' மற்றும் 'E' எழுத்துகளும் மாயமாகியுள்ளன. இதுவே அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலைக்கு ஒரு குறியீடாகத் தெரிகிறது.
இந்த பிரமாண்ட வளாகத்தில் இந்தியா முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 10 மாணவிகள், 5 மாணவர்கள் என மொத்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 15 மட்டுமே! 1,000 பேர் அமரக்கூடிய கலையரங்கம், திறந்தவெளி திரையரங்கம், அருங்காட்சியகம் என அனைத்தும் இருந்தும், அவற்றை அனுபவிக்க அங்கு ஆட்கள் இல்லை.
நான்கு மாடிக் கட்டடத்தில் பெரும்பாலான அறைகள் பூட்டப்பட்டுள்ளன. லேப்கள் (Labs) மற்றும் நூலகங்கள் பெரும்பாலும் திறக்கப்படுவதே இல்லை என அங்கிருந்த காவலர்கள் தெரிவிக்கின்றனர். கழிவறைகள் பயன்பாட்டில் இல்லை. எங்கு பார்த்தாலும் தூசு படிந்து கிடக்கிறது.
உத்திரபிரதேச அரசின் நிர்வாக லட்சணம் இதுதான் என்று அங்குள்ளோர் கூறுகின்றார்கள்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
