செய்திகள் இந்தியா
மகாராஷ்டிராவை உலுக்கும் வன்கொடுமை வழக்கு: அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்
அம்ராவதி:
மகாராஷ்டிர மாநிலம் பரத்வாடா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கில், தற்போது மற்றுமொரு பெண் துணிச்சலாக முன்வந்து புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், இரண்டாவது பெண் அளித்த இந்தப் புகார், அங்கு நடந்துள்ள அத்துமீறல்களின் தீவிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின்படி, தன்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்டது, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது குறித்து அவர் காவல்துறையிடம் விரிவான வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒரே பகுதியில் அடுத்தடுத்து பெண்கள் இத்தகைய புகார்களை அளிப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை உறுதியளித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பு, உளவியல் ஆலோசனைகளை வழங்க அரசு முன்வந்துள்ளது. இந்தச் சங்கிலித்தொடர் புகார்களால், இவ்வழக்கின் விசாரணை தற்போது புதிய கோணத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
