நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதில் மலேசியா தனது மீள்திறனை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்

புத்ராஜெயா:

அதிகரித்து வரும் உலகளாவிய செலவுகள், விநியோகச் சங்கிலி இடையூறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள மலேசியா தனது மீள்திறனை வலுப்படுத்த வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

வரும் மாதங்களுக்கு நாட்டில் போதுமான பெட்ரோலிய விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும் டீசல் பற்றாக்குறை, உர விநியோகப் பிரச்சினைகள் போன்ற சவால்கள் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

அதிகரித்து வரும் செலவுகள், ஏற்படக்கூடிய விநியோகப் பற்றாக்குறைகள் காரணமாக, இந்தப் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்த, மீள்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு வலுவான உறுதிப்பாடு தேவை.

அடுத்த சில மாதங்களுக்கு எங்களுக்குப் போதுமான பெட்ரோலிய விநியோகத்திற்கு உத்தரவாதம் இருப்பதால் மலேசியா அதிர்ஷ்டசாலி நாடாகும்.

ஆனால் டீசல், உர விநியோகம் தொடர்பான கூடுதல் சவால்களை நாம் எதிர்கொள்ள நேரிடலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset