நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பழைய பகையால் வந்த வினை: நடுரோட்டில் ஆடவர் மீது தாக்குதல்

அலோர் ஸ்டார்:

அலோர் ஸ்டார், தித்தி காஜா பகுதியில் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 10 மணியளவில் 38 வயதுடைய நபர் ஒருவர் அடையாளம் தெரிந்த நபரால் தாக்கப்பட்டார். 

இந்தத் தாக்குதல் தொடர்பான ஒரு நிமிடம் 22 வினாடிகள் கொண்ட காணொலி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சந்தேக நபர் பாதிக்கப்பட்ட நபரைத் தாக்கி கீழே தள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்தத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தேக நபரின் மனைவிக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என்று தெரியவந்துள்ளது. 

கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் சையத் பஸ்ரி சையத் அலி இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான நபருக்குத் தலையில் உட்புறக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்ததை அடுத்து, அவர் சுல்தானா பாஹியா மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வாந்தி, மயக்கம் இருந்ததால், வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சந்தேக நபர், மூன்று சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 323-ன் கீழ் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset