செய்திகள் இந்தியா
டெல்லியில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம்: மஞ்சள் எச்சரிக்கை
புதுடெல்லி:
இந்தியத் தலைநகர் டெல்லியில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக நேற்று 42.8 டிகிரி செல்சியஸ் (109.04 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நகரின் பல பகுதிகளில் 42 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுவதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு ‘வெப்ப அலை நீண்டகால திட்டம் 2026’-ஐ ஆய்வு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனைகளில் குளிர்ச்சியான அறைகள், கூடுதல் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க தானியங்கி குடிநீர் இயந்திரங்கள், தண்ணீர் லாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
பள்ளிகளில் மாணவர்களுக்கு முறையான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதை நினைவூட்டும் ‘வாட்டர் பெல்’ முறை அமல்படுத்தப்பட உள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மதிய நேரங்களில் வெளிப்புற வேலைகளைத் தவிர்க்கவும், தொழிலாளர்களுக்கு முறையான நிழற்குடை வசதிகள், உப்பு சர்க்கரை கரைசல் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட குளறுபடிகள் மீண்டும் நடக்காமல் இருக்க, பேரிடர் மேலாண்மை ஆணையம் வானிலை மையத்துடன் இணைந்து உடனுக்குடன் தகவல்களைப் பகிரத் திட்டமிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
