செய்திகள் இந்தியா
மலேசியா, இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடைவிதித்தால் இந்தியாவில் பொருட்களின் விலை உயரும்
டெல்லி:
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயரக் கூடும் அபாயம் ஏற்பட்டிருப்பது ஒருபக்கம். மறுபக்கம் விரைவில் பாமாயில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உலகிலேயே அதிக அளவு பாமயிலை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது.
ஆண்டுதோறும் சுமார் 9.5 மில்லியன் டன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உள்நாட்டு பாமாயில் உற்பத்தி 4 லட்சம் டன்னுக்கும் குறைவாகவே உள்ளது.
இந்த சூழலில் நம் நாட்டின் பெரும்பாலான பாமாயில் தேவையை இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயில் சுமார் 40 சதவீதம் பாமாயில் தான். இதன் விலை குறைவாகவும், நீண்ட நாள் கெடாமல் இருப்பதாலும் வீடுகளில் மட்டுமின்றி சிப்ஸ், சமோசா, பிஸ்கட், கேக், பேக்கரி பொருட்கள், இன்ஸ்டன்ட் உணவுகள் போன்றவை தவிர சோப்பு, கிரீம், லோஷன் உள்ளிட்ட அழகு தயாரிப்பு பொருட்களிலும் பாமாயில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்தோனேசியா, மலேசியா நாடுகள் பாமாயில் ஏற்றுமதி தொடர்பாக கட்டுப்பாடுகளை விதிக்க பரிசீலித்து வருகின்றன.
இதற்கு காரணம் பாமயிலை பயோ டீசலாக மாற்றி, டீசலுடன் கலந்து உள்நாட்டில் பயன்படுத்தும் திட்டம் குறித்து அந்நாடுகளில் பரிசீலனையில் உள்ளது. இந்தோனேசியா டீசலில் 40 சதவீதம் வரை பாமயிலை கலக்க முயற்சிக்கிறது.
மலேசியாவும் பி10-லிருந்து பி15, பி20 போன்ற திட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஹோர்மோஸ் நீரிணை பகுதியில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, கப்பல் போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்ற காரணங்கள் பாமாயில் ஏற்றுமதி விவகாரத்தை இன்னும் சிக்கலாக்குகின்றன.
இதனால் மேற்கண்ட இரு நாடுகளிடமிருந்தும் இந்தியாவிற்கு கிடைக்கும் பாமாயில் அளவு குறைந்து சமையல் எண்ணெய், தின்பண்டங்கள், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
