செய்திகள் இந்தியா
600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி
மும்பை:
தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரராக திகழ்கிறார். அவரது வீடு மும்பையின் தென்பகுதியில் இருக்கிறது. அண்டிலியா என்ற அந்த வீடு மும்பையில் அனைவராலும் பார்க்க விரும்பும் ஒரு இடமாக இருக்கிறது.
அவரது வீடு மும்பையின் தென்பகுதியில் இருக்கிறது. அண்டிலியா என்ற அந்த வீடு மும்பையில் அனைவராலும் பார்க்க விரும்பும் ஒரு இடமாக இருக்கிறது. 27 மாடிகள் கொண்ட இந்த அண்டிலியா கட்டிடம் ரூ.15,000 கோடி மதிப்புடையது.
இந்த கட்டிடத்தில் சமையல்காரர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என மொத்தம் 600 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அதிகமானோர் அங்கேயே தங்கிக்கொள்ள இடவசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அம்பானி குடும்பத்தினர் கேழ்வரகில் தயாரிக்கப்படும் உணவு, சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட பிரெட், குஜராத்தி முறை உணவு, சலாட்களையே அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.
இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காக தினமும் 4000 சம்பாத்தி தயாரிக்கப்படுகிறது.
இங்கு பணியாற்றும் தலைமை சமையல்காரர் ஒரு கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி போன்று செயல்படுகிறார். இங்கு ரொட்டி தயாரிக்கும் ஒரு சமையல்காரருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2 லட்சம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஆண்டிலியாவில் 3 மாடியில் தொங்கும் கார்டன் அமைக்கப்பட்டுள்ளது. 160க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்த ஆறு அடுக்கு கார் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர்களை தரையிறக்கும் தளம் போன்ற வசதியும் இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
