நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியில் கூட்டணி கட்சியாக மக்கள் சக்தி கட்சி இணைவதற்கு மஇகா தடையாக இருக்காது: டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்:

மஇகா தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடனான சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம், எதிர்கால  இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் கூறினார்.

மஇகா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுடன் இன்று சிறப்பு சந்திப்பு நடைபெற்றது.

அவரின் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மலேசிய மக்கள் சக்தி கட்சி தற்போது தேசிய முன்னணியின் நட்பு கட்சியாக உள்ளது.

எதிர்காலத்தில் மலேசிய மக்கள் சக்தி கட்சி தேசிய முன்னணியின் கூட்டணி கட்சியாக ஆவதற்கு ஆதரவளிக்கும் வகையில் அதன்  தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் பின் ஹமிடியிடம் பேச தயாராக உள்ளதாகவும் மஇகா எந்த வகையிலும் ஆட்சேபிக்கவோ அல்லது தடை செய்யவோ மாட்டாது என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதியளித்தார்.

இதன் அடிப்படையில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய முன்னணி கூட்டணி கட்சியாக இணையும் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

முன்னதாக இன்றையப சந்திப்பில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஆர்.கே. ரமேஷ், உதவித் தலைவர் கே. குகேஸ்வரன், உச்சமன்ற உறுப்பினர் திரு எஸ்.பி. கானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் எங்கள் வருகையை ஏற்றுக் கொண்டு மிகவும் அன்பாகவும், மரியாதையுடனும் உபசரித்த டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset