நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியான் சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் அல் நசர்

ரியாத்:

ஆசியான் சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு அல் நசர் அணியினர் முன்னேறி உள்ளனர்.

ஷாபல் அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் அஹ்லி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் அல் அஹ்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணிக்காக கிங்ஸ்லே கோமன் ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை அங்காலோ கேப்ரியல், அப்துல்லா அல் ஹம்டான் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான் அல் நசர் அணியினர் ஆசியான் சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset