நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி மீண்டும் தோல்வி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் செல்சி அணியினர் மீண்டும் தோல்வி கண்டனர்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் பிரிக்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்சி அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியிடம் தோல்வி கண்டனர்.

பிரிக்டோன் அணியின் வெற்றி கோல்களை ஃபெர்டி காடியோக்லு, ஜாக் ஹின்ஷெல்வுட், டேனி வெல்பெக் ஆகியோர் அடித்தனர்.

செல்சி அணியின் தொடர் தோல்வி அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset