நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

வோல்வேர்ஹாம்டன் அணி அதிகாரப்பூர்வமாக  பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறியது

லண்டன்:

வோல்வேர்ஹாம்டன் அணி அதிகாரப்பூர்வமாக  பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறியது.

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் வெஸ்ட் ஹாம் யுனைடெட், கிறிஸ்டல் பேலஸ் அணிகள் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டன.

இதைத் தொடர்ந்து,  வோல்வேர்ஹாம்டன் அணி இங்கிலாந்து பிரிமியர் லீக்கிலிருந்து தரமிறக்கப்பட்டதாக இன்று அதிகாலை உறுதி செய்யப்பட்டது.

இன்னும் ஐந்து ஆட்டங்களே மீதமுள்ள நிலையில் வோல்வேர்ஹாம்டன் 17ஆவது இடத்தில் உள்ள வெஸ்ட் ஹாம் அணியை விட 16 புள்ளிகள் பின்தங்கியுள்ளது. 

இது சாம்பியன் லீக்கிற்கு அவர்கள் தரமிறக்கப்படுவதை உறுதி செய்துள்ளது.

புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் வோல்வேர்ஹாம்டன் அணி, நவம்பர் மாதம் முதல் ராப் எட்வர்ட்ஸ் பயிற்சியின் கீழ், இதுவரை ஆடிய 33 லீக் ஆட்டங்களில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று, ஒரு ஏமாற்றமான பருவத்தை சந்தித்துள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset