செய்திகள் இந்தியா
கேரளாவில் பயங்கரம்: பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
பெங்களூரு:
தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள பட்டாசு கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில் பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த இரண்டாவது விபத்து இதுவாகும். திருச்சூர் மாவட்டப் போலிஸ் கண்காணிப்பாளர் நகுல் ராஜேந்திர தேஷ்முக் இது குறித்துக் கூறுகையில், மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், காயமடைந்த 15 பேரில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
திருவிழாக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் ஆறு பேரின் உடல் பாகங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதால், அவர்களின் அடையாளத்தைக் கண்டறிய டி.என்.ஏ (DNA) பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தத் தீ விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்துப் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்டை மாநிலமான தமிழகத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது கேரளாவிலும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் முறையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாததே இதுபோன்ற தொழிற்சாலை விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது.
கடந்த மாதமும் மேற்கு இந்தியாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அரங்கேறும் இத்தகைய விபத்துகள், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு, விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள பலவீனத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
