செய்திகள் இந்தியா
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
பெங்களூரு:
பெங்களூருவில் ஸ்பா, மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த விபச்சாரத் தொழிலை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக முறியடித்துள்ளனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஆறு பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில் தொடர்புடைய இடைத்தரகர்கள், உரிமையாளர்கள் உட்பட ஆறு நபர்களைப் போலிசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லேஅவுட் (HSR Layout), வர்த்தூர் (Varthur) ஆகிய பகுதிகளில் உள்ள மசாஜ் மையங்கள், ஒரு தனியார் வீட்டை மையமாகக் கொண்டு இந்த சட்டவிரோதச் செயல்கள் அரங்கேறியது கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றவாளிகள் சமூக வலைதளங்கள், கைப்பேசி வாயிலாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு, ஸ்பா சிகிச்சைகள் என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.
சோதனையின் போது அங்கிருந்த ரொக்கப் பணம், பல கைப்பேசிகளையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.
மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற உரிமம் பெறாத, சட்டவிரோத மசாஜ் மையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
