செய்திகள் இந்தியா
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
மும்பை:
மும்பையின் கண்டிவலி பகுதியில் கார் ஓட்டப் பழகிக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வாடகை கார் ஒன்று அருகில் இருந்த 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்தத் திடுக்கிடும் சம்பவத்தில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்துள்ளனர்.
வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் தனது நண்பருக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகக் காரின் வேகம் அதிகரித்து, கிணற்றின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே விழுந்தது.
கிணற்றில் நீர் குறைவாக இருந்ததால் கார் முழுமையாக மூழ்கவில்லை. விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, கிணற்றுக்குள் சிக்கியிருந்த இருவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றிலிருந்த கார் வெளியே எடுக்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 11:50 am
விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்த கேராளவைச் சேர்ந்த நபர் கைது
August 7, 2026, 9:51 am
பாலியல் பலாத்கார வழக்கில் தெஹெல்கா நிறுவனர் குற்றவாளி எனத் தீர்ப்பு: பத்தாண்டு சிறை
August 4, 2026, 5:55 pm
பிரசாந்த் கிஷோர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்
August 4, 2026, 12:20 pm
2030-ல் அஹமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான கொடி இந்தியாவிடம் ஒப்படைப்பு
August 3, 2026, 6:23 pm
வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி: எரிவாயு மானியம் சரிபார்த்த பெண் அதிர்ச்சி
August 3, 2026, 6:17 pm
கேரளத்தில் திடீர் நிலச்சரிவு: மக்கள் நூலிழையில் உயிர் தப்பினர்
August 2, 2026, 11:22 am
கேரளாவில் கடும்கனமழையில் 6 பேர் உயிரிழந்தனர்; பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
July 30, 2026, 11:43 am
அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 75-ஆக அதிகரிப்பு
July 29, 2026, 10:47 pm
