செய்திகள் வணிகம்
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: முக்கிய உலக நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் ஏற்றம்
கோலாலம்பூர்:
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டு வாரப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் புதன்கிழமை முடிவடைய இருப்பதால், சந்தை பங்கேற்பாளர்கள் அதில் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் வலுவாகத் திறந்துள்ளது.
காலை 8.26 மணிக்கு, உள்ளூர் நாணயம், நேற்று மூடிய போது இருந்த 3.9515/9555 என்பதிலிருந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக 3.9450/9505 ஆக அதிகரித்தது.
சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈரான் பங்கேற்கும் என்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக மலேசிய முவமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அப்ஸானிசம் அப்துல் ரஷித் தெரிவித்தார்.
"தற்போது WTI, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலைகள் முறையே ஒரு பீப்பாய்க்கு AS$88.19, AS$95.48 ஆக இருப்பதால், வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும், ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்றும், பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கான இடத்தை வழங்கும் வகையில், போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்றும் நம்புகின்றனர்" என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதற்கிடையில், சமீபத்திய தரவுகள், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியப் பொருளாதாரம் பின்னடைவுடன் இருப்பதைக் காட்டுவதாக அவர் கூறினார். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 5.3 சதவீதமாக இருந்தது. அதே சமயம், பெயரளவிலான ஏற்றுமதி, முந்தைய காலாண்டில் 11.0 சதவீதமாக இருந்ததை ஒப்பிடும்போது, 12.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
"இருப்பினும், அதிக எரிபொருள் விலைகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார நடவடிக்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வணிகங்கள் தங்கள் செலவுகளை இறுதி நுகர்வோருக்கு மாற்றக்கூடும்.
"அதன்படி, வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் மேற்கு ஆசியாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதால், ரிங்கிட் ஒரு குறுகிய வரம்பிற்குள் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. USD/MYR மாற்று விகிதம் இன்று 3.95 முதல் 3.96 ரிங்கிட் வரை இருக்கும் வாய்ப்புள்ளது" என்றார் அவர்.
திறப்பின் போது, முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் ரிங்கிட் அதிகமாக வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
நேற்று மூடிய போது இருந்த 5.3412/3466 என்பதிலிருந்து, பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக 5.3356/3431 ஆகவும், யூரோவுக்கு எதிராக 4.6489/6536 என்பதிலிருந்து, 4.6480/6545 ஆகவும், ஜப்பானிய யென்னுக்கு எதிராக 2.4863/4890 என்பதிலிருந்து, 2.4819/4855 ஆகவும் வலுப்பெற்றது.
ஆசியான் பிராந்திய நண்பர்களுக்கு எதிராக உள்ளூர் நாணயம் கலவையாக வர்த்தகமானது.
நேற்று இருந்த 3.1077/1111 என்பதிலிருந்து, சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 3.1053/1101 ஆக உயர்ந்தது. தாய் பாட்டுக்கு எதிராக 12.3127/3313 என்பதிலிருந்து, 12.3204/3438 ஆக வலுப்பெற்றது. இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராக 230.1/230.5 என்பதிலிருந்து, 229.7/230.2 ஆக சற்று உயர்ந்தது. மேலும், நேற்று இருந்த 6.58/6.60 என்பதிலிருந்து, பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக 6.57/6.59 ஆக உயர்ந்தது.
தொடர்ந்து, இன்றைய நிலவரப்படி இந்திய ரூபாய் ஒரு ரிங்கிட்டிற்கு 23.58 காசாக சரிந்துள்ளது. டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 93.34 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
