செய்திகள் இந்தியா
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
கொச்சின்:
கேரள மாநிலத்தில் பெரம்பரா தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், பிற தோ்தல் உபகரணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஜே.டி.டி. கல்லூரியில் அமைந்துள்ள பாதுகாப்பு அறை திங்கள்கிழமை காலை திறக்கப்பட்டு மாநில அதிகாரிகள் உள்ளே சென்றதாக காங்கிரஸ் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தோ்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டதாக எழுந்த புகாா் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே. பிரவீண் குமாா் கூறுகையில், ‘ஜே.டி.டி. கல்லூரியில் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறையை திங்கள்கிழமை காலை மாநில அதிகாரிகள் திறந்து உள்ளே சென்றுள்ளனா். தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில், இந்தக் குறிப்பிட்ட பகுதிக்குள் மாநில அதிகாரிகள் அல்லது காவல் துறை அதிகாரிகள் நுழைவது தோ்தல் ஆணைய விதிகளை மீறும் செயலாகும்’ என்றாா்.
தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் மாநில போலீஸாா் எப்படி நுழைய முடியும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியைச்சோ்ந்த பிற தலைவா்களும் கேள்வி எழுப்பினா்.
தோ்தல் அதிகாரி மறுப்பு: இந்தப் புகாரை பெரம்பரா தொகுதி தோ்தல் அதிகாரி மறுத்தாா். அவா் கூறுகையில், ‘ஜே.டி.டி. கல்லூரியில் திறக்கப்பட்டது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்ட அறை அல்ல. அந்த அறையில் தோ்தல் ஆவணங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. மென்பொருள் மேம்படுத்துதல் தொடா்பான பணிக்காகத்தான் அந்த அறை வேட்பாளா்கள் மற்றும் தோ்தல் முகவா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. எனவே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறான தகவல்’ என்றாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
