செய்திகள் உலகம்
போரின் விளைவு: வான்வழித் தாக்குதலால் முடங்கிய 20 விமானங்கள்
தெஹ்ரான்:
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் காரணமாக, ஈரானில் சுமார் 20 பயணிகள் விமானங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்துப் பேசிய ஈரான் விமான நிறுவனங்களின் சங்கத் தலைவர் மக்சூத் அசாதி சாமானி, 40 முதல் 60 விமானங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் உண்மையல்ல என்றும், சுமார் 20 விமானங்கள் மட்டுமே பெருமளவில் சேதமடைந்துள்ளன என்றும் தெளிவுபடுத்தினார்.
ஈரானிடம் மொத்தம் 250 முதல் 300 பயணிகள் விமானங்கள் உள்ளன. அவற்றில் தாக்குதலுக்கு முன்னதாக 150 விமானங்கள் பயன்பாட்டில் இருந்தன; மற்றவை தொழில்நுட்பக் காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தற்போது சேதமடைந்த விமானங்கள் நீக்கப்பட்ட பிறகு, நாட்டில் 130 விமானங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், ஈரானின் 95 விழுக்காடு விமான நிலையங்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்படாமல் சீராக இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா, இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்திய இராணுவ நடவடிக்கைகளில் 3,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முயற்சியால் ஏப்ரல் 8 முதல் இரு வார காலத் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இஸ்லாமாபாத்தில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் தயாராகி வருவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 12:50 pm
பிரசவ அறையாக மாறிய நீதிமன்றம்: மகிழ்ச்சியும் சோகமும் நிறைந்த நீதிமன்ற பிரசவம்
May 19, 2026, 10:40 am
காங்கோவில் இபோலோ தொற்றினால் 91 பேர் மாண்டனர்: அமெரிக்க விமான நிலையங்களில் கடும் பரிசோதனை
May 18, 2026, 7:26 pm
ராயல் கிங்க்ஸ் குழுமத் தலைவர் சிராஜுத்தீனுக்கு கலைச் செம்மல் விருது
May 14, 2026, 3:57 pm
பிரிட்டிஷ் சொகுசுக் கப்பலில் புதிதாக இப்போது நொரோவைரஸ்
May 12, 2026, 6:15 pm
