நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கியூபாவை கைப்பற்ற போவதாக டிரம்ப் மிரட்டல் பேச்சு: மெக்சிகோ, பிரேசில், ஸ்பெயின் கடும் கண்டனம்

பார்சிலோனா: 

அமெரிக்க அதிபர் டிரம்ப் கியூபாவை ஆக்கிரமிக்கப் போவதாக விடுத்த மிரட்டலுக்கு ஸ்பெயின், பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் நாட்டுடனான மோதல்கள் ஒருபுறம் தீவிரமடைந்தன. இந்தச் சூழலில் கியூபாவைத் தான் அடுத்துக் கைப்பற்றப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தார்.

இந்நிலையில், இன்று ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் மெக்சிகோ, பிரேசில், ஸ்பெயின் ஆகிய 3 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெற்றது. 

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதில் கியூபா மக்கள் எதிர்கொண்டு வரும் கடுமையான மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டதுடன், அமெரிக்காவின் மிரட்டல்களைத் தாண்டி அந்நாட்டைப் பாதுகாக்க 3 நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், ‘சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு கியூபாவில் நிலவும் சூழலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

கியூபாவின் இறையாண்மையை மதிப்பதோடு, அந்நாட்டு மக்களே தங்கள் எதிர்காலத்தை சுதந்திரமாக தீர்மானிக்க வழிவகை செய்ய வேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘கியூபாவை ஏதோ ஒரு வகையில் கைப்பற்றும் பெருமை எனக்குக் கிடைக்கும். நான் கியூபாவை விடுவிப்பதா அல்லது ஆக்கிரமிப்பதா என்பது குறித்து கவலை இல்லை; ஆனால் கியூபாவில் எதை வேண்டுமானாலும் என்னால் செய்ய முடியும்’ என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்தார். 

டிரம்பின் இத்தகைய ஆக்கிரமிப்புப் பேச்சுகளுக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் என இந்த 3 நாடுகளும் தற்போது அறைகூவல் விடுத்துள்ளன.

​​​​​- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset