செய்திகள் உலகம்
புளோரிடாவில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்
இஸ்தான்புல்:
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் நேற்று ஒரு இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில், ஒரு நபர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் உட்பட அதிகாரிகளை மேற்கோள் காட்டி அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த விமானம், செஸ்னா C402 என ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தால் (FAA) அடையாளம் காணப்பட்டது. இது, டம்பா நார்த் ஏரோ பார்க்கில் இருந்து புறப்பட்டதாகவும், உள்ளூர் நேரப்படி காலை 8.35 மணியளவில் வெஸ்லி சேப்பல் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் விபத்துக்குள்ளானதாகவும் FAA தெரிவித்துள்ளது.
FAA-வின் கூற்றுப்படி, அந்த விமானத்தில் விமானி மட்டுமே இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விபத்து, அருகிலுள்ள வீட்டிற்கு சிறிய சேதத்தை ஏற்படுத்தியதாகவும், பாஸ்கோ மாவட்ட பொது தகவல் அதிகாரி சாரா ஆண்டரியா, CBS இணைப்பு நிலையமான WTSP-யிடம் கூறினார்.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) இந்த விபத்து குறித்த விசாரணையை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், சம்பவ இடத்திற்கு ஒரு விசாரணையாளரையும் அனுப்பியுள்ளது.
சம்பவ இடம் ஆவணப்படுத்தப்பட்ட பின்னர், மேலதிக மதிப்பீட்டிற்காக, அந்த விமானம் மற்றொரு இடத்திற்கு மாற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 12:50 pm
பிரசவ அறையாக மாறிய நீதிமன்றம்: மகிழ்ச்சியும் சோகமும் நிறைந்த நீதிமன்ற பிரசவம்
May 19, 2026, 10:40 am
காங்கோவில் இபோலோ தொற்றினால் 91 பேர் மாண்டனர்: அமெரிக்க விமான நிலையங்களில் கடும் பரிசோதனை
May 18, 2026, 7:26 pm
ராயல் கிங்க்ஸ் குழுமத் தலைவர் சிராஜுத்தீனுக்கு கலைச் செம்மல் விருது
May 14, 2026, 3:57 pm
பிரிட்டிஷ் சொகுசுக் கப்பலில் புதிதாக இப்போது நொரோவைரஸ்
May 12, 2026, 6:15 pm
