செய்திகள் இந்தியா
குடும்பத் தகராறில் மடிந்த இரு உயிர்கள்: பெற்றோர் சடலங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த 6 வயது சிறுவன்
குர்கான்:
அரியானா மாநிலம் குர்கானில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களது 6 வயது மகன், படுக்கையறையில் தனது தாய் சடலமாகக் கிடப்பதையும், தந்தை தூக்கில் தொங்குவதையும் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளான்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், தம்பதியினருக்கு இடையே கடந்த சில காலமாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் உச்சகட்டமாக, கணவன் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், தானும் அதே அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் இருவரின் சடலங்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்கள் கண்முன்னே பெற்றோர் சடலமாகத் தொங்குவதைக் கண்ட அந்த 6 வயது சிறுவன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளான்.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எவ்வித தற்கொலைக் கடிதமும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்படவில்லை என்பதால், தற்கொலைக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய போலிசார் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
