செய்திகள் தொழில்நுட்பம்
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட booster-ஐக் கொண்டு ராக்கெட்டைப் பாய்ச்சும் Blue Origin
நியூயார்க்:
அமெரிக்கத் தனியார் விண்வெளி நிறுவனம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தூண்டுகருவியை (Booster) வைத்து அதன் பிரமாண்டமான நியூ கிளென் (New Glenn) ராக்கெட்டைப் பாய்ச்சவுள்ளது.
ஜெஃப் பெஸொஸின் (Jeff Bezos) Blue Origin நிறுவனம் முதன்முறையாக இந்த முயற்சியில் இறங்குகிறது.
இலோன் மஸ்க்கின் (Elon Musk) SpaceX நிறுவனத்துடன் கடும் போட்டி நிலவும் வேளையில் Blue Origin இந்தப் புதிய அணுகுமுறையைக் கையாள்கிறது.
சுமார் 100 மீட்டர் உயரமுள்ள நியூ கிளென் உந்துகணையில் இதுவரை புதிய தூண்டுகருவி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் (AST SpaceMobile) நிறுவனத்தின் தகவல் தொடர்புச் செயற்கைக்கோளை அது ஏந்திச்செல்லும்.
இந்த முயற்சி வெற்றிபெற்றால்:
* புளூ ஒரிஜின் நிறுவனத்தின் புதிய தூண்டுகருவிக்கான செலவுகளைக் குறைக்கும்
* பாய்ச்சப்படும் வேகம் அதிகரிக்கும்
புளோரிடாவின் ((Florida) கெனவரல் முனையிலிருந்து(Cape Canaveral) ஏவப்படவுள்ளது உந்துகணை.
கடந்த நவம்பரில், புளூ ஒரிஜின் நிறுவனம் முதன்முறையாக நியூ கிளென் தூண்டுகருவியை வெற்றிகரமாக மீட்டது.
2028ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் NASAவின் ஆர்ட்டெமிஸ் (Artemis) திட்டத்தில் பங்கெடுக்க Blue Origin, SpaceXஉடன் போட்டியிடுகிறது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:13 am
தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
