செய்திகள் இந்தியா
மீண்டும் முடங்கியது ஹோர்முஸ் நீரிணை: இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு
மும்பை:
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடி சூடிய இரண்டு கப்பல்களை உள்ளடக்கிய 'துப்பாக்கிச் சூடு சம்பவம்' தொடர்பாக, ஏப்ரல் 18 ஆம் தேதி ஈரான் தூதரை அழைத்து புது டெல்லி எதிர்ப்புத் தெரிவித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியப் போர் நிறுத்தத்தின் போது, அந்த மூலோபாய வர்த்தகப் பாதையை வணிகப் போக்குவரத்திற்கு மீண்டும் திறப்பதாக ஈரான் அளித்த வாக்குறுதியைத் திரும்பப் பெற்றதாகத் தெரிகிறது.
அமெரிக்காவின் பதிலடி முற்றுகைக்கு எதிர்வினையாக இவ்வாறு செய்யப்பட்டதகாவும் குறிப்பிடப்படுகிறது.
ஏப்ரல் 18 ஆம் தேதி, அந்த நீரிணை வழியாகச் செல்ல முயன்றபோது, பல வணிகக் கப்பல்களும் ஈரானியப் படைகளால் துப்பாக்கிச் சூடு, கொடிய அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியதாக பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஈரான் தூதரைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அழைத்ததாகவும், 'ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடி தாங்கிய இரண்டு கப்பல்களை உள்ளடக்கிய நேற்றைய ஆரம்பத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இந்தியாவின் தீவிர கவலையை வெளிப்படுத்தியதாகவும்' இந்திய வெளியுறவு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
'ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவை நோக்கிச் செல்லும் கப்பல்களின் பயணத்தை எளிதாக்கும் செயல்முறையை உடனடியாக மீண்டும் தொடங்குமாறு' புது டெல்லி ஈரானை வலியுறுத்தியதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், அந்தத் தூதர் 'அந்தக் கருத்துக்களை ஈரான் அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதாக உறுதியளித்தார்' என்றும் அது மேலும் கூறியுள்ளது.
'இரண்டு இந்தியக் கப்பல்கள், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கடற்படையால் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து மேற்கு நோக்கித் திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட்டன' என்று கண்காணிப்புத் தளமான TankerTrackers.com எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய திரவ பெட்ரோலிய எரிவாயு வாங்கும் நாடுமான இந்தியா, சமீபத்திய வாரங்களில் பல தாயகக் கப்பல்கள் அந்தப் பாதை வழியாகச் செல்வதை உறுதி செய்வதில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா அதன் திரவ பெட்ரோலிய எரிவாயு தேவைகளில் சுமார் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி மேற்கு ஆசியப் போர் தொடங்கியதிலிருந்து எரிவாயு விநியோகப் பற்றாக்குறையை அந்நாடு எதிர்கொள்கிறது.
தெஹ்ரானுடன் புது டெல்லி நல்ல உறவுகளைப் பேணி வருகிறது. இருப்பினும், அதே நேரத்தில், பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு ஆகிய துறைகளில், ஈரானின் போட்டியாளரான இஸ்ரேலுடனான ஒத்துழைப்பையும் விரிவுபடுத்தி வருகிறது.
ஏப்ரல் 17 ஆம் தேதி, அந்த நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இருப்பினும், ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீதான அமெரிக்கத் தடைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 17 ஆம் தேதி 50 நாள் முற்றுகை திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று தடை செய்யப்பட்ட கப்பல்கள் உட்பட ஒரு டஜன் க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றதாகத் தெரிகிறது. அதன் பின்னர், ஏப்ரல் 18 ஆம் தேதி ஈரான் மீண்டும் முற்றுகையை விதித்து, பல கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
