செய்திகள் இந்தியா
கடனை திருப்பிக் கேட்ட கடைக்காரருக்கு நேர்ந்த கதி: ஆத்திரத்தில் காதை கடித்துக் குதறிய பெண்
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், மளிகைக் கடையில் தான் வைத்திருந்த பழைய கடன் பாக்கியைத் திருப்பித் தருமாறு கடைக்காரர் கேட்டதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், கடைக்காரரின் காதைக் கடித்த விசித்திரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட கடைக்காரர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட கடைக்காரர், தனது கடையில் நீண்ட நாட்களாகப் பாக்கி வைத்திருந்த அந்தப் பெண்ணைச் சந்தித்தபோது, பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அந்தப் பெண், கடைக்காரரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், திடீரென அவரது காதை மிகக் கொடூரமாகக் கடித்துக் காயப்படுத்தியுள்ளார்.
வலியால் துடித்த கடைக்காரரை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணத்தைத் திரும்பக் கேட்டதற்காக ஒரு பெண் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
