செய்திகள் இந்தியா
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு இந்திய அரசு விளம்பரம்
புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவின் விளம்பரத்துக்காக இந்திய கலாசாரத் துறை ரூ. 76 லட்சம் செலவிட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
அமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா கடந்தாண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.
சமூக ஆர்வலர் அஜய் வாசுதேவ் போஸ் என்பவர், ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவின் விளம்பரத்துக்காக மத்திய அரசு எவ்வளவு செலவிட்டது என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தார்.
இந்த கேள்விக்கு மத்திய கலாசார அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கலாச்சார அமைச்சகத்தால் பல்வேறு அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்ட மொத்த தொகை ரூ. 76,13,129 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கலாசார அமைச்சகம் அளித்த பதிலின் நகல் இணையத்தில் பகிரப்பட்டு, “அரசு சாராத தனியார் அமைப்பின் விழாவின் விளம்பரத்துக்கு மத்திய அரசு செலவிட்டது ஏன்?” என்று பலரால் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
சுதந்திர இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூன்று முறை தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
