செய்திகள் இந்தியா
"மனிதாபிமானம் எங்கே?”: குழந்தைகளைக் கைவிடுவதில் 5-ஆவது ஆண்டாக முதலிடத்தில் இருக்கும் மத்தியப் பிரதேசம்
போபால்:
இந்தியாவில் பச்சிளம் குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில், மத்தியப் பிரதேச மாநிலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் இருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
குப்பைத் தொட்டிகள், பேருந்துகள், அடர்ந்த காட்டுப் பகுதிகள் எனப் பாதுகாப்பற்ற இடங்களில் பச்சிளம் உயிர்கள் வீசப்படும் கொடுமை அந்த மாநிலத்தில் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐந்தாண்டு காலத் தரவுகளின்படி, பிறந்து சில மணிநேரமே ஆன குழந்தைகள் முதல் சில மாதக் குழந்தைகள் வரை பலமுறை கைவிடப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலான குழந்தைகள் முறையற்ற உறவு அல்லது வறுமை காரணமாகப் பெற்றோர்களால் கைவிடப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண் குழந்தைகள் அதிகளவில் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாவது சமூகத்தின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மத்தியப் பிரதேச அரசு, காவல் துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
குழந்தைகள் நலக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இது குறித்துக் கூறுகையில், குழந்தைகளை வளர்க்க இயலாதவர்கள் அவர்களைக் காப்பகங்களில் ஒப்படைக்க முன்வர வேண்டுமே தவிர, வீதிகளில் வீசிச் செல்லக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில் இத்தகைய குற்றங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மத்தியப் பிரதேசத்தில் மற்ற மாநிலங்களை விடப் பலமடங்கு அதிகமாக உள்ளது.
இந்த மனிதாபிமானமற்ற செயல்களைத் தடுக்க இன்னும் கடுமையான சட்ட நடவடிக்கை, சமூக விழிப்புணர்வு அவசியம் என்பதே தற்போதைய சூழலில் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
