செய்திகள் இந்தியா
மும்பையில் பரபரப்பு: திருமண ஆசை காட்டி புது மாப்பிள்ளைகளை ஏமாற்றிய ‘மாயக் கன்னி’
மும்பை:
திருமண ஆசை காட்டி வசதியான இளைஞர்களை ஏமாற்றி நகை, பணத்துடன் தப்பியோடிய மணப்பெண்ணும், அவரது போலி தந்தையும் குறித்து மும்பை போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணையதளம் மூலம் அறிமுகமான இளம்பெண் ஒருவர், தன்னை ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நம்பவைத்து, மும்பையைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, சில நாட்களிலேயே நகை, பெருந்தொகையுடன் தலைமறைவாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் இதற்கு முன்பே இதே பாணியில் பலரைத் திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது அம்பலமானது.
ஒவ்வொரு முறையும் ஒரு நபரைத் தந்தையாக அறிமுகப்படுத்தும் அந்தப் பெண், திருமணத்திற்குப் பிறகு சில வாரங்களிலேயே வீட்டை விட்டு ஓடிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த மோசடியில் அந்தப் பெண்ணுடன் ஒரு பெரிய கும்பலே பின்னணியில் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் வழங்கிய வைர நகைகள், தங்கக் காசுகள், பல லட்ச ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் மாயமாகியுள்ளார்.
இவர்களது அடையாள அட்டைகள், முகவரிகள் அனைத்தும் போலியானவை என்பது போலிஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்த 'மாயக் கன்னியும்', அவரது போலி தந்தையையும் தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நவீன காலத்தில், வரன் தேடும் இணையதளங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களைப் பற்றித் தீர விசாரிக்காமல் திருமண ஒப்பந்தங்களில் ஈடுபட வேண்டாம் எனப் பொதுமக்களுக்குப் போலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தத் தொடர் திருமண மோசடிச் சம்பவம் மும்பை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
