செய்திகள் இந்தியா
மழைக்கால வெள்ளத்திற்கு முற்றுப்புள்ளி: நவீன 'பிரிகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் புதிய வடிகால் அமைப்பு
டெல்லி:
டெல்லி மாநகரம் மழைக்காலங்களில் எதிர்கொள்ளும் வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், 'பிரிகாஸ்ட்' (Precast) எனப்படும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட சிமெண்ட் கட்டுமானத் தொழில்நுட்பத்தைத் டெல்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், வடிகாலுக்கான கான்கிரீட் பாகங்கள் தொழிற்சாலையிலேயே தயார் செய்யப்பட்டு, கட்டுமான இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு விரைவாக இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் சாலைகளில் நீண்ட காலம் பள்ளம் தோண்டி நடத்தப்படும் பாரம்பரிய கட்டுமான முறையினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுகிறது.
இந்த புதிய முறையினால் கட்டுமானப் பணிகள் சுமார் 50 சதவீதம் வேகமாகவும், தரமாகவும் முடிக்கப்படுவதாகத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தத் தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதுடன், கட்டுமானத்தின் போது ஏற்படும் தூசு, ஒலி மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கிறது. குறிப்பாக, குறுகலான சந்துகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த முறை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
தற்போது டெல்லியின் பல முக்கிய பகுதிகளில் இந்த வடிகால் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் மழைக்காலத்திற்குள் பெரும்பாலான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன மாற்றத்தின் மூலம் நகரின் கழிவுநீர் மேலாண்மை சீராகும் என்றும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
