நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமை, தொழில்நுட்ப முன்னேற்றம் முக்கியம்: கோபிந்த் சிங் டியோவின் சித்திரை புத்தாண்டு வாழ்த்து

புத்ராஜெயா:

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மலேசிய மக்களுக்கும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார்.


இந்தத் புத்தாண்டு, கடந்த சாதனைகளைப் பரிசீலித்து, வளமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் ஒரு முக்கியமான தருணம்.

இலக்கவியல் அமைச்சின் மூலம், எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து மலேசியர்களும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பங்கெடுக்கச் செய்வதே தங்களின் நோக்கம்.

இலக்கவியல் புதுமைகள் சமூக வளர்ச்சிக்கும் தேசிய முன்னேற்றத்துக்கும் உதவ வேண்டும்.

உலகளாவிய சூழலில் நிலவும் சிக்கல்கள், குறிப்பாக மத்திய கிழக்கில் தொடரும் மோதலால் உருவான எரிசக்தி நெருக்கடி, நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் அன்றாட வாழ்வையும் பாதிக்கிறது.

இந்த சவால்களை சமாளிக்க மடானி
அரசாங்கம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சமூக நல்லிணக்கமே நாட்டின் மிகப்பெரிய வலிமை எனக் கூறிய அவர், இன, மத வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இதே வேளையில் சீக்கிய, மலையாளி சமூகத்தினருக்கும் வைசாகி, விஷு பண்டிகை நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset