செய்திகள் இந்தியா
மத்திய பிரதேசத்தில் பரபரப்பு: பீகாரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு கடத்தப்பட்ட 163 சிறுவர்கள் மீட்பு
மத்திய பிரதேசம்:
பீகார் மாநிலத்திலிருந்து மகாராஷ்டிராவிற்கு கட்டாய வேலைக்காக இரயிலில் கடத்தி வரப்பட்ட 163 சிறுவர்களைப் போலிசார் அதிரடியாக மீட்டனர். இது தொடர்பாக 20 முதல் 40 வயதுக்குட்பட்ட எட்டு நபர்களைப் இரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு, பாட்னா-பூர்ணா விரைவு இரயிலில் பெருமளவிலான சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் அழைத்துச் செல்லப்படுவதாகக் குழந்தைகள் நலக் குழுவிற்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கட்னி இரயில் நிலையத்தில் காத்திருந்த பாதுகாப்புப் படையினர், ஞாயிறு அதிகாலை இரயில் வந்தடைந்ததும் சோதனையிட்டு உரிய ஆவணங்கள், பயணச்சீட்டுகள் இன்றி இருந்த அந்த சிறுவர்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட 6 முதல் 13 வயதுடைய இந்த சிறுவர்கள் அனைவரும் பீகாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மகாராஷ்டிராவின் லத்தூருக்குக் கொத்தடிமைத் தொழிலுக்காக அழைத்துச் செல்லப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்பொழுது அச்சிறுவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
