செய்திகள் இந்தியா
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
மும்பை:
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 92.
மும்பையில் உள்ள கேண்டி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் காலமானார். உடலின் பல்வேறு உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1933-ல் மகாராஷ்டிராவில் உள்ள சங்க்லியில் அவர் பிறந்தார். சிறு வயதிலேயே தனது இசைப்பயணத்தை அவர் தொடங்கினார். பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். இதில் இசையின் பல்வேறு ஜானர்களும் அடங்கும். 1950-களில் தேசம் பரவலாக அறியப்பட்ட நட்சத்திர பாடகராக உயர்ந்தார்.
தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர் ஆகியோரது இசையில் அவர் பாடல்களைப் பாடியுள்ளார். செப்டம்பர் மாதம் (அலைபாயுதே), ஓ பட்டர்பிளை (மீரா), செண்பகமே செண்பகமே (எங்க ஊரு பாட்டுக்காரன்), நீ பார்த்த பார்வை (ஹே ராம்) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும். இசையில் அவரது பங்களிப்பை போற்றும் வகையில் தாதாசாஹேப் பால்கே விருது, பத்ம விபூஷண் விருது ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டன.
அவரது மறைவையடுத்து திரை உலகினர், இசைத்துறையினர், பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
