நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாண்டான் தொகுதியில் இடைத் தேர்தல்; கெஅடிலான் ஏற்பாடுகளை செய்யலாம்: ரபிசி

கோலாலம்பூர்:

என்னைப் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் இறுதி நோக்கத்துடன், தனது தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த கெஅடிலான் கட்சி நடவடிக்கை எடுத்து வரலாம்.

பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பரிலேயே இடைத்தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடு முடிந்துவிட்ட போதிலும், அவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்.
மேலும் அப்படி ஒரு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அந்தத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முன்னாள் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜப்ருல் கெஅடிலான் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

கெஅடிலான் கட்சியிலிருந்து விலகுமாறு தன்னை வலியுறுத்தி கட்சித் தலைவர்கள் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையையும், நேற்று பாண்டனில் கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திய செயலையும் சுட்டிக்காட்டி தனது கூற்றை ஆதரித்தார்.

என் வாழ்நாளில் அன்வார் பாண்டானுக்கு வந்ததை ஒருபோதும் பார்த்ததில்லை.

கட்சியிலிருந்து விலகும் எண்ணத்தை அவர் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டுவதற்கு முன்னதாகத் தனக்குக் கிடைத்த விளக்கம் கோரும் கடிதத்தால், சாத்தியமான இடைத்தேர்தல் குறித்த தனது எதிர்பார்ப்பு மேலும் வலுப்பெற்றதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset