செய்திகள் மலேசியா
கார்ப்பரலால் தாக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற பயிற்சி மாணவர் மரணம்
கோலாலம்பூர்:
கார்ப்பரலால் தாக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற பயிற்சி மாணவர் மருத்துவமனையில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.
24 வயதான பயிற்சியாளர் முஹம்மது அமிருல் ரசிக் பகாங் தெமர்லோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.
இறந்தவரின் தந்தை 49 வயதான ரோஸ்பின்டி தம்பி சிக், இதுகுறித்த தகவலைத் தொடர்புகொண்டபோது உறுதிப்படுத்தினார்.
இறந்தவர் காலை 9.45 மணிக்கு உயிரிழந்தார்.
அவரது உடல் நெகிரி செம்பிலான், கெமாஸில் உள்ள பெல்டா சுங்கை கெலாமா மயான கொல்லையில் அடக்கம் செய்யப்படும் என்று இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
முன்னதாக, மார்ச் 31 அன்று ஆயுதக் கிடங்கின் துப்புரவுப் பணியில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கார்ப்பரல் பதவியில் உள்ள ஒரு சந்தேக நபரால் முகமது அமிருல் ரசிக் கடுமையாகத் தாக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 11, 2026, 5:59 pm
ஜொகூர், மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிபிபி கட்சி தயார்: டத்தோ லோகபாலா
April 11, 2026, 5:54 pm
கல்விமைச்சின் மெட்ரிகுலேசன் தொடர்பான அறிக்கையை வரவேற்கிறோம்; பாராபட்சம் வேண்டாம்: டத்தோ லோகபாலா
April 11, 2026, 4:34 pm
புதிய கட்சியில் இணைவது 'சிறந்த வழி அல்ல': ஹம்ஸா சூசகம்
April 11, 2026, 4:25 pm
நிழல் தரும் ராணுவமே உயிரைப் பறிப்பதா?: கோப்ரல் அடித்ததில் படுகாயமடைந்த இராணுவ வீரர் மரணம்
April 11, 2026, 4:13 pm
