செய்திகள் மலேசியா
நிழல் தரும் ராணுவமே உயிரைப் பறிப்பதா?: கோப்ரல் அடித்ததில் படுகாயமடைந்த இராணுவ வீரர் மரணம்
கோலாலம்பூர்:
முன்னர் ஒரு கோப்ரலால் தாக்குண்டதாக நம்பப்பட்ட நிலையில் கடுமையாகக் காயமடைந்த பிரபெட் பதவியிலுள்ள ஒரு இராணுவ வீரர், இன்று பஹாங்கின் தெமர்லோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
24 வயதுடைய பாதிக்கப்பட்ட முஹம்மத் அமீருல் ராசிக் ரோசபிண்டி, காலை 9.45 மணியளவில் கடைசி மூச்சை விட்டதாக உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் தந்தை, 49 வயதுடைய ரோசபிண்டி தம்பி சிக், தொடர்பு கொண்டபோது அந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
"இறந்தவர் சற்று முன் காலை 9.45 மணிக்கு தனது கடைசி மூச்சை விட்டார். இறந்தவரின் உடல் நெகிரி செம்பிலான், கெமாஸ், ஃபெல்டா சுங்கை கெலாமாவில் உள்ள புசாரா டாமாய் கல்லறையில் அடக்கம் செய்யப்படும்" என்று அவர் கூறினார்.
இதற்கு முன்னர், கடந்த மார்ச் 30 ஆம் தேதி, ஆயுதக் கிடங்கின் சுத்தம் செய்யும் பணி குறித்து அதிருப்தி கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு கோப்ரல் பதவியிலுள்ள உறுப்பினரால் பாதிக்கப்பட்டவர் கடுமையாக தாக்குண்டதாக நம்பப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
முந்தைய அறிக்கையில், இராணுவ பொதுத் தொடர்பு பிரிவு, ஆரம்பக் கட்ட விசாரணையில், அதிகாரி ஒருவர் மற்ற உறுப்பினர்கள் சிலர் மீது வன்முறையைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தது.
பெந்தோங் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பிரண்டெண்டன் ஜைஹாம் முஹம்மத் கஹார், ஆரம்பக் கட்ட விசாரணையில், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை உடலின் பல பகுதிகளில் அடித்ததாகவும், குத்தியதாகவும், உதைத்ததாகவும் நம்பப்படுவதாகக் கூறியிருந்தார்.
அந்தச் சம்பவத்தின் போது, 19 முதல் 22 வயதுக்குட்பட்ட மேலும் ஆறு பேர் அங்கு இருந்ததாகவும் விசாரணைகள் கண்டறிந்தன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 11, 2026, 5:59 pm
ஜொகூர், மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிபிபி கட்சி தயார்: டத்தோ லோகபாலா
April 11, 2026, 5:54 pm
கல்விமைச்சின் மெட்ரிகுலேசன் தொடர்பான அறிக்கையை வரவேற்கிறோம்; பாராபட்சம் வேண்டாம்: டத்தோ லோகபாலா
April 11, 2026, 5:52 pm
கார்ப்பரலால் தாக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற பயிற்சி மாணவர் மரணம்
April 11, 2026, 4:34 pm
புதிய கட்சியில் இணைவது 'சிறந்த வழி அல்ல': ஹம்ஸா சூசகம்
April 11, 2026, 4:13 pm
