நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்விமைச்சின் மெட்ரிகுலேசன் தொடர்பான அறிக்கையை வரவேற்கிறோம்; பாராபட்சம் வேண்டாம்: டத்தோ லோகபாலா

கோலாலம்பூர்:

எஸ்பிஎம் தேர்வில் 10 ஏ பெற்ற மாணவர்கள் மெட்ரிகுலேஷன் பயில வாய்ப்பு வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்ததை பிபிபி கட்சி பெரிதும் வரவேற்கிறது.

ஆனால் எஸ்பிஎம் தேர்வில் 10 ஏ பெற்ற மாணவர்கள் விடுபட மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக அதன் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

கல்வியமைச்சின் அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

அதே வேளையில் கல்வியமைச்சர் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று பிபிபி கட்சி பெரிதும் நம்பிக்கை கொள்கிறது.

மேலும் எஸ்பிஎம் தேர்வில் நன்னெறி பாடத்தில் ஏராளமான மாணவர்கள் தோல்வி கண்டிருப்பதாக கூறப்படும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

எல்லா பாடத்திலும் தேர்ச்சி பெற்ற வேளையில் நன்னெறி பாடத்தில் மட்டும் மாணவர்கள் தோல்வி கண்டது குறித்து கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலக அளவில் எண்ணெய் விலை அதிக அளவு ஏற்றம் கண்டுள்ளது.

இருப்பினும் இப்போது இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் எண்ணெய் கப்பல்கள் வரத் தொடங்கி உள்ளது.

ஆகவே எண்ணெய் விலை மீண்டும் குறைய வாய்ப்பு உள்ளது.

தேசிய முன்னணி ஆட்சி காலத்தில்  எண்ணெய் விலை சீராக எல்ல நேரத்திலும் சீராக இருந்தது.

இப்போது எண்ணெய் விலை சீராக இல்லை.  டீசல் விலை உயர்வால் சம்பந்தப்பட்ட தரப்பினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முன்னதாம பிபிபி கட்சியின் 73ஆம் ஆண்டு கொண்டாட்டம் இன்று கம்போங் அத்தாப் பிபிபி தலைமையகத்தில் விமரிசையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset