செய்திகள் மலேசியா
அஸ்தியின் 20ஆம் ஆண்டு அறிவியல் விழாவில் பாலர் பள்ளி மாணவர்களுக்கான புதிய பிரிவு அறிமுகம்: டாக்டர் முஹம்மத் யூனுஸ்
கோலாலம்பூர்:
அஸ்தியின் 20ஆம் ஆண்டு அறிவியல் விழாவில் பாலர் பள்ளி மாணவர்களுக்கான புதிய பிரிவு அறிமுகம் செய்யப்படவுள்ள்ளது.
அஸ்தியின் தலைவர் டாக்டர் முஹம்மத் யூனுஸ் யாசின் இதனை கூறினார்.
தமிழப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல், கண்டுபிடிப்பு ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவியல் விழா தொடங்கப்பட்டது.
இவ்வாண்டு 20ஆவது ஆண்டாக இவ்விழா நடைபெற்வுள்ளது.
இவ்வாண்டு விழாவில் 400 தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 40 ஆயிரம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்க வருவார்கள் என நாங்கள் நம்புகிறோம்.
குறிப்பாக இவ்வாண்டு பாலர் பள்ளி மாணவர்களுக்கு என புதிய பிரிவு இவ்வாண்டு அறிமுகம் காண்கிறது.
இது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என யூனுஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த காலங்களை போன்று பல புதுமைகளை உள்ளடக்கி இந்த அறிவியல் விழா நடைபெறவுள்ளது.
குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும். இதுவே இவ்விழாவின் இலக்கு.
வரும் மே மாத இறுதியில் இப்போட்டி தொடங்கவுள்ளது. மேலும் இப்போட்டி பல பிரிவுகளாக இவ்விழா நடைபெறவுள்ளது.
இப் பிரிவுகளின் வாயிலாக தேர்வு செய்யப்படும் 70 முதல் 100 பள்ளிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
ஆக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்போட்டிக்கு தயாராக இருக்க வேண்டும் என்று என்று அறிவியல் விழாவில் இயக்குநர் சுபாஷ் கிருஷ்ணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 11, 2026, 5:59 pm
ஜொகூர், மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிபிபி கட்சி தயார்: டத்தோ லோகபாலா
April 11, 2026, 5:54 pm
கல்விமைச்சின் மெட்ரிகுலேசன் தொடர்பான அறிக்கையை வரவேற்கிறோம்; பாராபட்சம் வேண்டாம்: டத்தோ லோகபாலா
April 11, 2026, 5:52 pm
கார்ப்பரலால் தாக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற பயிற்சி மாணவர் மரணம்
April 11, 2026, 4:34 pm
புதிய கட்சியில் இணைவது 'சிறந்த வழி அல்ல': ஹம்ஸா சூசகம்
April 11, 2026, 4:25 pm
நிழல் தரும் ராணுவமே உயிரைப் பறிப்பதா?: கோப்ரல் அடித்ததில் படுகாயமடைந்த இராணுவ வீரர் மரணம்
April 11, 2026, 4:13 pm
