செய்திகள் கலைகள்
கலைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிபந்தனைகள் குறித்து சட்ட விழிப்புணர்வு தேவை: டத்தோ ஃபாஹ்மி ஃபாட்ஸில்
கோலாலம்பூர்:
படைப்புத் துறையில் உள்ளவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களிடையே சட்ட விழிப்புணர்வு மிக முக்கியமான பிரச்சினையாகக் கருதப்படுகிறது, மேலும் இது தீவிர கவனம் தேவைப்படும் ஒரு விஷயமாகும்.
தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்ஸில், திவால் நிலைத் துறை, சட்ட உதவித் துறையுடனான மூலோபாய ஒத்துழைப்பு மூலம் சட்டப் புரிதலை வலுப்படுத்தும் முயற்சிகள்
மேம்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஒப்பந்தங்கள், வேலைப் பாதுகாப்பு அம்சங்களில், தங்கள் உரிமைகள், பொறுப்புகளைப் புரிந்துகொள்ள அந்த முன்முயற்சி படைப்புத் துறையில் உள்ளவர்களுக்கு உதவும் என்று ஃபாஹ்மி நம்புவதாகத் தெரிவித்தார்.
மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திற்கும் (ஃபினாஸ்) மலேசிய திவால் நிலைத் துறைக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு உட்பட, பல்வேறு புதிய முன்முயற்சிகளை அறிவித்து, நாட்டின் திரைப்படத் துறையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் தனது அர்ப்பணிப்பைக் காட்டியது. இது நிதி சவால்களை எதிர்கொள்ளும் கலைஞர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஃபினாஸ், மலேசிய திவால் நிலைத் துறைக்கு இடையிலான ஒத்துழைப்பு, நிதிச் சுமைகளைக் குறைப்பதற்கும், படைப்புத் துறையில் உள்ளவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் உதவும் ஒரு நடவடிக்கையாகும் என்று ஃபாஹ்மி கூறினார்.
அவர் நேற்று முன்தினம் தாமான் மெலாவாத்தியில் உள்ள அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் மாநாட்டு மையத்தில் (MPAJ) நடைபெற்ற மலேசிய கலைஞர்கள் தினம் 2026 கருத்தரங்கில் இவ்வாறு கூறினார்.
அந்நிகழ்வில் பிரதமர் துறை அமைச்சர் (சட்டம், நிறுவன சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அசலினா ஒத்மான் சயீத், தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங், தகவல் தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்ஸா; ஃபினாஸ் தலைவர் டத்தோ ஹான்ஸ் ஐசக், சங்கப் பிரதிநிதிகள், படைப்புத் துறையில் உள்ளவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அசலினாவின் அர்ப்பணிப்பிற்காக ஃபாஹ்மி பாராட்டும் தெரிவித்தார்.
அந்த ஒத்துழைப்பு, ரிம250,000 க்கும் குறைவான மதிப்புள்ள ஒப்பந்தத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான நடுவர் சேவைகளை வழங்குவதையும் உள்ளடக்கியது. இது, நீண்ட நீதிமன்ற செயல்முறையின் மூலம் செல்லாமல், சட்டப் பிரச்சினைகளைக் கையாள்வதில் தொழில்துறையினருக்கு உதவும் என்று கருதப்படுகிறது.
குறிப்பாக ஃபினாஸிலிருந்து நிதி பெறும் தயாரிப்பு நிறுவனங்களை உள்ளடக்கிய, கார்ப்பரேட் உரிமத் திட்டத்தில் (SPP) நிலையான ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்தவும் பயன்படுத்தவும் ஃபாஹ்மி பரிந்துரைத்தார்.
நிதி பெறும் தயாரிப்பு நிறுவனங்கள், அனைத்து ஊழியர்கள், நடிகர்கள், தயாரிப்புக் குழுவினருக்கு சமூக பாதுகாப்பு அமைப்பு (சோக்சோ), ஊழியர் சேமிப்பு நிதியத்திற்கு (KWSP) பங்களிப்புகளை வழங்குவது உட்பட, தொழிலாளர்களின் நலன்களை உறுதி செய்ய வேண்டும் என்று ஃபாஹ்மி கூறினார்.
உள்ளூர் திரைப்படத் துறை நெறிமுறையாக வளர்வதை உறுதி செய்வதற்கும், தொழிலாளர் சுரண்டல் அபாயத்தைக் குறைப்பதற்கும் இந்த முன்முயற்சி முக்கியமானது என்று ஃபாஹ்மி மேலும் தெரிவித்தார்.
படைப்புத் துறையின் நலன், நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிகள், அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, பல ஊக்கத்தொகைகளும் அறிவிக்கப்பட்டதாக ஃபாஹ்மி கூறினார்.
"அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மலேசியாவில் திரைப்பட படப்பிடிப்பு ஊக்கத்தொகைக்கான (FIMI) ரிம300 மில்லியன் ஒதுக்கீடு உட்பட, பல விஷயங்களை நான் அறிவித்தேன்.
"அதிகமான சர்வதேச தயாரிப்புகளை ஈர்ப்பதற்கும், உள்ளூர் கலைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"இரண்டாவதாக, தேசிய அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட உள்ளடக்க மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ரிம10 மில்லியன் மதிப்புள்ள சித்ரா நிதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் அடங்கும்" என்று அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் கலைஞர்களைப் பாதுகாப்பதற்கான பதிப்புரிமை அம்சங்களை ஆராயுமாறு ஃபினாஸுக்கும் ஃபாஹ்மி உத்தரவிட்டார்.
"உண்மைதான், நாம் கலைஞர்கள் தினத்தைக் கொண்டாடுகிறோம், மேலும் மறைந்த தான் ஸ்ரீ பி. ராம்லியை நினைவுகூர்கிறோம். இருப்பினும், தற்போதைய செயற்கை நுண்ணறிவின் சகாப்தத்தில், மறைந்த தான் ஸ்ரீ பி. ராம்லியின் முகம், தோற்றம், குரல், இயக்க முறைகள் கூட திருடப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்படலாம்.
"கலைஞர்களின் முகம், குரல் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய, ஃபினாஸ் குழுவும், சட்ட ஆலோசகர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று நான் கோருகிறேன்.
செயற்கை நுண்ணறிவு மூலம் தவறாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்க, பதிப்புரிமையை நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும்" என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், ஃபினாஸ், தேசிய திரைப்படக் கொள்கையில் (DFN) திருத்தங்களைச் செம்மைப்படுத்தி வருகிறது.
இது அடுத்த 10 ஆண்டுகளுக்கான நீண்டகால மூலோபாயத் திட்டமாகும். இது, அனிமேஷன், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முழுத் தொழில்துறை சூழலியல் அமைப்பையும் உள்ளடக்கியதாகும். மலேசியாவை பிராந்திய, சர்வதேச தளங்களில் போட்டித்தன்மை வாய்ந்த படைப்புத் துறை மையமாக மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதே நிகழ்ச்சியில், 12 திரைப்படங்களுக்கு மொத்தம் ரிம275,718 தொகையில், திரைப்படத் திரையிடல் ஊக்கத்தொகை (ITFC) 2.0 இலக்கம் 1 ஆண்டு 2026-ஐ ஃபாஹ்மி வழங்கினார்.
நாட்டின் திரைப்படம், தொலைக்காட்சித் துறையில் உள்ளவர்களைப் பாராட்டும் வகையில், நேற்று முன்தினம் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மறைந்த பி. ராம்லியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி கலைஞர்கள் தினம் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஹரி ராயா அய்டில்ஃபித்ரி கொண்டாட்டங்களுக்கு இடமளிக்கும் வகையில், அதிகமான தொழில்துறையினர் மகிழ்ச்சியான சூழலில் கலந்து கொள்ளும் வகையில், இந்த ஆண்டு கொண்டாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 4:42 pm
ஆர்யாவின் தன் 40-வது திரைப்படத்தில் இரு நாயகிகள்
April 6, 2026, 4:25 pm
பிரபல இயக்குநரின் மனைவியின் படப்பிடிப்பைத் துவங்கி வைத்த நடிகர் சூர்யா
April 3, 2026, 5:39 pm
அல்லு அர்ஜுனின் 25 வது படத்தை பசில் ஜோசப் இயக்குகிறார்
March 26, 2026, 6:40 pm
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மீண்டும் தள்ளிப் போகிறது
March 25, 2026, 6:30 pm
தென்கிழக்காசியாவின் மர்மமான 'பில்லி சூனியம்': வெள்ளித்திரையில் விரிந்த 'காங் தாவ்' மந்திர உலகம்
March 22, 2026, 6:30 pm
கலைஞர்களின் சேவையைப் போற்றும் மலேசியா: பி. ரம்லியின் 97-வது பிறந்தநாளில் சிறப்பு அங்கீகாரம்
March 22, 2026, 6:16 pm
