செய்திகள் உலகம்
வெப்பத்தின் பிடியில் சிக்கிய பேங்காக்; குளிரூட்டப்பட்ட மையங்களை நோக்கிப் படையெடுக்கும் பொதுமக்கள்
பேங்காக்:
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் வெயிலின் தாக்கம் "மிகவும் அபாயகரமான" நிலையை எட்டியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றில் உள்ள ஈரப்பதம், வெப்பநிலையை கணக்கிடும் 'வெப்பக் குறியீடு' (Heat Index) உச்சத்தைத் தொட்டுள்ளதால், சாதாரண மக்கள் வெளியில் நடமாடுவது உயிருக்கு ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதீத வெப்பத்தினால் உடலில் நீர்ச்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் கடுமையான வெப்பத்தைச் சமாளிக்க முடியாமல், சுமார் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாங்காக் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 'குளிர்விப்பு மையங்களை' (Cooling Centres) நோக்கி விரைந்துள்ளனர். குளிரூட்டப்பட்ட வசதிகள் கொண்ட இந்த மையங்களில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ளதால், அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக, ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள் மற்றும் வீடுகளில் குளிரூட்டி வசதி இல்லாதவர்கள் இந்த அரசு மையங்களை அதிகளவில் நாடியுள்ளனர்.
தற்போது நிலவும் இந்த அதீத வெப்பம் காரணமாகப் முதியவர்கள், குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாங்காக் மாநகராட்சி அதிகாரிகள் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், முதலுதவி சிகிச்சைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண வெப்ப அலை, மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 4:27 pm
ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா தாக்குதல்கள் தீவிரப்படுத்தி உள்ளது
September 5, 2026, 5:18 pm
பங்களாதேஷில் தட்டம்மையால் உயரும் மரண எண்ணிக்கை
September 5, 2026, 2:50 pm
இந்தோனேசியாவில் அனாக் கிரக்காத்துவா எரிமலை மீண்டும் வெடிப்பு: சுனாமி ஆபத்து இல்லை எனத் தகவல்
September 5, 2026, 11:38 am
ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணையாக மாற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை
September 4, 2026, 9:43 pm
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 12:35 pm
நேப்பாள வெள்ள பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 3, 2026, 5:43 pm
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: இதுவரை 16,300 பேர் வரை உயிரிழப்பு
September 2, 2026, 4:25 pm
