நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக மலேசியக் கப்பல்கள் செல்ல அனுமதி: ஈரானை பிரதமர் பாராட்டினார்

புத்ராஜெயா:

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக மலேசியாவின் எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதித்த ஈரானின் முடிவுக்கு மலேசியா தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர்-அங்காரா உரையாடல் 2026இன் ஒரு பகுதியாக, மலேசியாவிற்கான ஈரானிய தூதர் வாலியோல்லா மொஹம்மதியுடன் நடைபெற்ற சந்திப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தப் பாராட்டைத் தெரிவித்தார்.

எரிசக்தி விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதில் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது.

இதன் மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவு மீதான அழுத்தத்தைக் குறைக்கும்.

குறிப்பாக நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிக்க இது உதவுகிறது என்று பிரதமர் தமது முகநூலில் கூறினார்.

முன்னதாக ஹோர்முஸ் ஜலசந்தியில் தற்போது சிக்கியுள்ள மேலும் ஆறு மலேசியக் கப்பல்கள் படிப்படியாக நீர்வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

மேலும் வட்டார நிலவரத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து ஹோர்முஸ் ஜலசந்தியில் முன்னர் சிக்கியிருந்த ஏழு மலேசியக் கப்பல்களில் ஒன்றுக்கு பாதுகாப்பான வழிவிடப்பட்டு, அது தற்போது தனது இறுதி இலக்கை நோக்கிப் பயணத்தைத் தொடர்வதாக வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset