நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்பட்ட கடைகளுக்கு மாதம் ரூ.25,000 இழப்பீடு வழங்குக: தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்புத் தலை​வர் விக்​கிரம​ராஜா வலியுறுத்தல்

திருவாரூர்: 

சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் மூடப்​பட்ட கடைகளுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் இழப்​பீடு வழங்க வேண்​டும் என தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்புத் தலை​வர் விக்​கிரம​ராஜா அரசை வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து திரு​வாரூர் மாவட்​டம் திருத்​துறைப்​பூண்​டி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: திரு​வாரூரில் மே 5-ஆம் தேதி நடை​பெறவுள்ள 43-ஆவது வணி​கர் மாநாடு தமிழக வணி​கர்​களின் திருப்​பு​முனை​யாக அமை​யும். இந்த மாநாட்​டுக்கு கால்​கோள் விழா (இன்​று) நடை​பெற உள்​ளது.

இம்​ மா​நாட்​டில் வணி​கர்​களை பாது​காக்​க​வும், சில்​லறை வியா​பாரி​களை கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் தாக்​கத்​தில் இருந்து காப்​பது குறித்​தும் வலி​யுறுத்​தப்​படும். 

கோயில் மனை​களில் குடி​யிருப்​பவர்​களுக்கு வாடகை விகிதம் குறைக்க வேண்​டும். அடிமனை தொடர்​பான குழப்​ப​மான அரசாணையை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும். 

இந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிறகு அமையக்​கூடிய அரசு, வணி​கர்​களின் கோரிக்​கைகளை உடனடி​யாக நிறைவேற்​றும் அரசாக அமை​யும்.

தேர்​தல் பணி​களில் ஈடு​படும் அதி​காரி​கள் வியா​பாரி​களை வழிப்​பறி​யில் ஈடு​படும் அளவுக்கு செயல்​படு​கிறார்​கள். அரிசி ஏற்​றிவரும் வாக​னங்​களைக் கூட பிடிக்​கிறார்​கள்.

இதை கண்டித்து போராட்டம் அறி​வித்​த​போது, சில தளர்​வு​களை தேர்​தல் ஆணை​யம் செய்​தது. தற்​போது மீண்​டும் அதே அத்​து​மீறல் தொடர்​கிறது. எனவே, போராட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டதே தவிர, ரத்து செய்​யப்​பட​வில்​லை.

நாடுமுழுவதும் சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் மூடப்​பட்டகடைகளுக்கு ஒன்றிய அரசு மாதம் ரூ.25 ஆயிரம் இழப்​பீடு தரவேண்​டும். போர்க்​கால அடிப்​படை​யில் சிலிண்​டர் தட்​டுப்​பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்வாறு கூறினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset