செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
சென்னை:
தமிழ்நாட்டில் ஆளும் தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெறும் என்றும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் பெயர் பரிந்துரைக்கப்படும் என்றும் அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.
தவெகவின் அழைப்பை ஏற்று அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்.
தவெக அரசு பெருந்தன்மையுடன் அமைச்சரவையில் சேர அழைப்பு விடுத்தது, அதனை ஏற்றுக் கொண்டு பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராவார் என்றும், எதிர்காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என்று காதர் மொகிதீன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து சென்னை மண்ணடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காதர் மொகிதீன், தமிழக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து அறிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு விடுத்த தவெகவுக்கு நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளோம்.
எங்கள் கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு ஆலோசனை பேரில்தான் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும். அவர்கள் ஆலோசனை நடத்தி முடிவெடுத்து நேற்று அறிவித்தார்கள்.
அதன்படி, தமிழகத்தில தமிழக வெற்றிக் கழகத்தில் அமைச்சரவையில் முஸ்லீம் லீக் இடம்பெறுகிறது. அவர்கள் கொடுத்த அமைச்சரவை பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒப்புக் கொள்கிறது.
அகில இந்திய அமைப்பும் அதன் ஒப்புதலும் பெற்று இன்று காலையில் இருந்து கூட்டம் நடத்தினோம். கூட்டத்தின் வாயிலாக எடுத்து முடிவில், தமிழகத்தில் அமைச்சரவையில் இடம்பெறுவதை ஆதரிப்பது என்றும், அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு ஒப்புக் கொண்ட அதே நேரத்தில், நாம் இரண்டு எம்எல்ஏக்களை வைத்திருக்கிறோம். இரண்டு அமைச்சர்களைக் கேட்கக் கூடாது என்றும் பேசப்பட்டது. அந்தக் கருத்து உள்வாங்கப்பட்டு, அவர்கள் முதலில் ஒப்புக் கொண்ட ஒருவரை தேர்ந்தெடுத்து அனுப்புவோம். அடுத்தவரைப் பற்றி பேசுவோம் என்று முடிவெடுத்து, தற்போது ஒருவரை தேர்ந்தெடுக்கக் கூடிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் பெயரை அமைச்சரவையில் இடம்பெற சிபாரிசு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
எதிர்காலத்தில் இரண்டு அமைச்சர்கள் பதவி கொடுத்தால் வரவேற்போம் என்றும் காதர் மொய்தீன் கூறியிருக்கிறார். அதே வேளையில், திமுகவுடன் உற்ற தோழனாக இருப்போம், தேர்தல் கூட்டணியில் திமுகவுடன் தொடர்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
