செய்திகள் தமிழ் தொடர்புகள்
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
சென்னை:
“அமைச்சரவையில் சேருமாறு எங்களை அழைப்பது தவெகவின் பெருந்தன்மையை காட்டுகிறது. இதுபற்றி எங்களின் தேசிய தலைமையிடம் ஆலோசனை கேட்டுள்ளோம். உயர்மட்டக் குழுவை கூட்டி நாளை காலை 11 மணிக்கு எங்கள் முடிவை அறிவிப்போம்” என ஐயூஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொஹைதீன் தெரிவித்துள்ளார்.
தவெக அமைச்சரவையில் இடம்பெறுமாறு விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்து ஐயூஎம்எல் தலைவர் காதர் மொஹைதீன், “அமைச்சரவையில் இடம்பெறுமாறு எங்களிடமும் பேசினர். தவெகவுக்கு நாங்கள் எந்த நிபந்தனையும் இன்றி ஆதரவளித்துள்ளோம். நாங்கள் எந்தவித கோரிக்கையும் அவர்களிடம் வைக்கவில்லை, எதையும் கேட்கவும் இல்லை. நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவளித்துள்ளோம்.
தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து நாங்கள் இப்போது வரை யோசிக்கவே இல்லை. நல்லெண்ணத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் பங்கேற்க அவர்கள் அழைக்கின்றனர். அமைச்சரவையில் சேருமாறு அழைப்பது தவெகவின் பெருந்தன்மையை காட்டுகிறது.
அரசியல் ரீதியாக முடிவெடுக்க எங்களின் தேசிய தலைமை உள்ளது. அவர்களிடம் இதுபற்றி கேட்டுள்ளோம். அதுபோல எங்கள் சமுதாய மக்களிடமும் ஆலோசனைக் கேட்டுள்ளோம். இதன் தொடர்ச்சியாக கட்சியின் உயர்மட்டக் குழுவை கூட்டி நாளை காலை 11 மணிக்கு எங்கள் முடிவை அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கு அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
