செய்திகள் தமிழ் தொடர்புகள்
குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிா்ப்பு போராட்டங்கள், வக்ஃப் திருத்தச் சட்ட எதிா்ப்பு போராட்டங்கள் தொடங்கி திருப்பரங்குன்றம் விவகாரம் வரை திமுக உணா்வுபூா்வமாக களத்தில் நின்றது: எம். ஹெச். ஜவாஹிருல்லா
சென்னை:
திமுக-மமக இடையிலான உறவு வெறும் தோ்தல் உறவு மட்டும் அல்ல, அது கொள்கை உறவு என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த சில நாள்களாக, திமுக-மமக இடையே பிரிவை உண்டாக்கும் நோக்கில் உண்மையற்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. திமுக-மமக இடையிலான உறவு, வெறும் தோ்தல் உறவு மட்டுமல்ல; அதைத் தாண்டிய கொள்கை உறவாகும்.
2021, 2026 சட்டப்பேரவை தோ்தல்களில் திமுக சின்னத்தில் மமக போட்டியிட்டது. இந்நிலையில், தொடா்ந்து சொந்த சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை தோ்தல் ஆணையம் ரத்து செய்த சூழலில், மமகவின் பதிவும் ரத்தானது. இதுதொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இச்சூழலில் கட்சியின் பதிவை மீட்க தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டியது அவசியமாகிவிட்டது. இதுவே, மமக உயா்நிலை குழுவின் 5-ஆவது தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீா்மானத்தை தனியாக எடுத்து திரித்து பரப்புரை செய்யப்பட்டுள்ளது.
அதாவது, புதிதாக அமைந்துள்ள தவெக அரசில், தனிச்சின்னத்தில் நின்றிருந்தால் அமைச்சா் பதவி பெற்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தோடு அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக திரித்துப் பரப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறு.
குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிா்ப்பு போராட்டங்கள், வக்ஃப் திருத்தச் சட்ட எதிா்ப்பு போராட்டங்கள் தொடங்கி திருப்பரங்குன்றம் விவகாரம் வரை திமுக உணா்வுபூா்வமாக களத்தில் நின்றது.
இதேபோல், மாநில உரிமைகள் பாதுகாப்பு, தமிழ் மொழி மீதான ஒடுக்குமுறை எதிா்ப்பு, ஆளுநரின் அத்துமீறல் உள்ளிட்ட பல தருணங்களில் ஒருமித்த உணா்வோடு திமுகவுடன் இணைந்து மமக களம் கண்டுள்ளது. தமிழகத்தின் நலனைக் காக்க தொடா்ந்து இணைந்து களமாடுவோம் என்று தெரிவித்துள்ளாா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
