செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஹஜ்ஜுப்பெருநாள் வர்த்தகம்: மேலப்பாளையம் சந்தையில் ஒரே நாளில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
மேலப்பாளையம்:
ஹஜ்ஜுப்பெருநாளாம் பக்ரீத் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.
தென் மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை திகழ்கிறது. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமைகளிலும் மாட்டுச் சந்தையும், செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டுச் சந்தையும் நடைபெறுகிறது.
இங்கு விற்பனைக்கு வரும் ஆடு, மாடுகளை வாங்க திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகின்றனா்.
இந்த நிலையில் இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஹஜ்ஜுப்பெருநாள் தமிழகத்தில் மே 28ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் மேலப்பாளையம் சந்தை களை கட்டியுள்ளது.
இச்சந்தையில் திங்கள்கிழமை மாடுகள் விற்பனை அதிக அளவு நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை ஆட்டுச் சந்தையில் விற்பனைக்காக ஏராளமான ஆடுகள் குவிக்கப்பட்டிருந்தன.
தூத்துக்குடி, தென்காசி, கோவில்பட்டி, புதியம்புத்தூா், எட்டயபுரம், ராமநாதபுரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து செம்மறியாடுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டன. நாட்டு ஆடுகள், மயிலம்பாடி, பொட்டு ஆடுகள் என பல்வேறு விதமான ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 வரை விலை போயின.
ஒரே நாளில் சுமாா் ரூ.3 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
