செய்திகள் தமிழ் தொடர்புகள்
தன் தேவைக்கேற்ப கொள்கைகளை மறந்து துரோகம் புரிவது காங்கிரசுக்குப் புதிதில்லை: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் கண்டனத் தீர்மானம்
சென்னை:
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், இளைஞர் அணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நடந்து முடிந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கும், தேர்தல் களத்தில் வழிநடத்தி 73 தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற முதன்மை காரணமாக விளங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. ஓய்வில்லாமல் உழைத்த இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 3-ல் கருணாநிதி பிறந்த நாள் விழாவை, இளைஞர் அணி சார்பில் மக்களுக்கு பயன்படும் வகையில் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். தேர்தல் களத்தில் திமுகவெற்றிவாய்ப்பை இழந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து மேற்கொள்ளவிருக்கும் அனைத்து மறுசீரமைப்புக்கும் இளைஞர் அணி துணைநிற்கும்.
திமுகவால் காங்கிரஸ் வெற்றி: கடந்த பல தேர்தல்களிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு பல சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் வெற்றிபெறக் காரணம் திமுகவினர்தான் என்பதை யாருமே மறுக்க முடியாது.
நடந்து முடிந்ததேர்தலிலும் திமுகவினரின் உழைப்பினால் 5 சட்டப்பேரவை உறுப்பினர்களை வென்றனர். தேசியக் கட்சியாக இருந்து கொண்டு தேர்தலுக்கு முன்பாகவே மாநிலக் கட்சியான திமுக உறுப்பினர்களின் வாக்குகளால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றனர்.
‘தன் தேவைக்கேற்ப கொள்கை களை மறந்து துரோகம் புரிவது காங்கிரசுக்குப் புதிதில்லை’ என திமுக இளைஞர் அணி கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
