செய்திகள் தமிழ் தொடர்புகள்
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது; மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன்: அண்ணாமலையின் பெயர் இடம் பெறவில்லை
சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன், சாத்தூர் நைனார் நாகேந்திரன், ஆவடி எம். ராஜசிம்மா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
வானதி கோயம்பத்தூர் வடக்கிலும் டாக்டர் எல் முருகன் அவிநாசியிலும், விஜயதரணி விளவங்கோட்டிலும் போட்டி இடுகின்றார்கள்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த திங்கள்கிழமையே வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணாமலை போட்டியிடும் தொகுதிதான் இழுபறியாக இருந்து வந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
