செய்திகள் தமிழ் தொடர்புகள்
கேரளாவில் வாக்குப்பதிவு நாளில் தமிழக எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூட குமரி மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு
கன்னியாகுமரி:
கேரளா மாநிலத்தில் வருகின்ற 09.04.2026 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, தமிழக கேரள எல்லையான பத்மனாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதி, மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபானக்கூடங்கள் 07.04.2026 அன்று காலை 10.00 மணி முதல் 09.04.2026 (கேரள மாநிலம் தேர்தல் நாள்) அன்று நள்ளிரவு 12.00 மணி வரையிலும் செயல்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சட்டசபை தேர்தலில் போட்டியிடுகின்றன.
மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் பா.ஜ.க. 98 தொகுதிகளிலும், காங்கிரஸ் 92 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 76 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளை களமிறக்கி உள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
