செய்திகள் தமிழ் தொடர்புகள்
“ஆளூர் ஷாநவாஸை தவிர்க்க எடுக்கப்பட்ட முடிவு இல்லை; அப்துல் ரஹ்மானுக்கும் வாய்ப்புத் தர வேண்டும்”: திருமாவளவன் விளக்கம்
சென்னை:
“ஆளூர் ஷாநவாஸை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அப்துல் ரஹ்மானுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்கப்பட்டது,” என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில், “ஒருவேளை நாகை மீண்டும் எங்களுக்கு கிடைத்திருந்தால் அதை ஆளூர் ஷாநவாஸுக்கே கொடுத்திருப்பேன். நான் மாற்று சிந்தனைக்கு போயிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அது ஜவாஹிருல்லாவுக்கு சென்றுவிட்டது.
ஆளூர் ஷாநவாஸ் நாகையில் போட்டியிட விரும்பவில்லை. இது குறித்து விசாரித்ததில் அவர் ராயபுரத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகச் சொன்னார்கள். அதற்குப் பிறகு பல்லாவரம் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அது தேமுதிகவிற்கு சென்றுவிட்டது.
முதல்வரே தலையிட்டு தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க வலியுறுத்தினார். அவசர கதியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அரூர் கேட்டோம் அரக்கோணம் தந்தார்கள். பல்லாவரம் கேட்டோம் பண்ருட்டி தந்தார்கள்.
எனவே, ஆளூர் ஷாநவாஸை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அப்துல் ரஹ்மானுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என அவர் பேசியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
