செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை விமானநிலையத்தில் இன்று முதல் உள்ளூர் விமான கட்டணங்கள் கடுமையாக உயர்வு: பயணிகள் அதிர்ச்சி
மீனம்பாக்கம்:
வளைகுடா போர் பதற்றத்தினால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் விமான எரிபொருள் கட்டணங்களும் பலமடங்கு அதிகரித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், பயணிகளின் விமான டிக்கெட் கட்டண உயர்வுக்கு விதித்திருந்த தடையை ஒன்றிய அரசு தளர்த்தியுள்ளது.
இதையடுத்து, சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ளூர் விமானக் கட்டணங்கள் இன்று முதல் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்கா-ஈரான்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் துவங்குவதற்கு முன்னதாக இருந்த கட்டணங்களைவிட, ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று முதல் அனைத்து விமானக் கட்டணங்களும் கிடுகிடுவென உயர்ந்துள்ளன.
சென்னை விமானநிலையத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் தூத்துக்குடிக்கு செல்ல குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.3,608. அதுவே, இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,503 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரியில் சென்னையில் இருந்து மதுரை செல்ல, குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.3,129. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,467.
இதேபோல் சென்னையில் இருந்து திருச்சிக்கு ஜனவரி மாத குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.3,608. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4,521.
சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த ஜனவரி மாத குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.4,351. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4,966.
இதேபோல் சென்னையில் இருந்து டெல்லிக்கு ஜனவரி மாத குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.5,933. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,496. மேலும், சென்னையில் இருந்து மும்பைக்கு ஜனவரி மாத குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.3,356. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4,020.
இதுதவிர, சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு ஜனவரி மாத குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,293. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,047. எனினும், தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் உள்ளூர் விமானங்களில் மட்டும் இந்த கட்டண உயர்வுகள் மிக அதிகமாகவும், சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் உள்ளூர் விமானங்களுக்கு ஓரளவு குறைவாக கட்டண உயர்வுகள் உள்ளன.
இதனால் இன்று சென்னை விமான நிலையத்தில் உள்ளூர் விமானங்களில் செல்ல வேண்டிய ஏராளமான பயணிகள் கூடுதல் விமான கட்டண உயர்வால் பெரிதும் அவதிப்பட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
