செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது: அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்பு
சென்னை:
தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதாவது 5 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்கிறது.
தமிழகத்தில் 6,600 கி.மீ.தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள், அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், பயணிகள் வாகனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
இச்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களில் கட்டணத்தை வசூலிக்க, தமிழகத்தில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இவற்றில் 60 சுங்கச்சாவடிகளில் ஏப்.1-ம் தேதி முதலும், மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் செப்.1-ம் தேதி முதலும் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
அந்த வகையில், தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சென்னையில் மாத்தூர், சூரப்பட்டு, வானகரம், செங்கல்பட்டில் பரனூர், கருங்குழி, காஞ்சிபுரத்தில் பெரும்புதூர், திருவள்ளூரில் நல்லூர், எஸ்.வி.புரம், பட்டரைபெரும்புதூர் உட்பட 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கார்கள் மற்றும் ஜீப்களுக்கான சுங்கக்கட்டணம் ரூ.10 வரை உயரும். பேருந்துகள், பிற கனகர வாகனங்களுக்கான கட்டணம் அவற்றின் பிரிவுகளைப் பொருத்து ரூ.40 முதல் ரூ.200 வரை உயரவுள்ளது.
சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்வால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள போரால், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல் உணவுகளின் விலை ஏற்கெனவே அதிகரித்துள்ளது.
தற்போதைய சுங்கக் கட்டணம் உயர்வால் சரக்கு வாகனங்களுக்கான செலவும் அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
