செய்திகள் தமிழ் தொடர்புகள்
தம்மிடம் ரூ.10 ஆயிரம் மட்டுமே ரொக்கம் உள்ளது; மனைவி துர்க்காவிடம் ரூ. 40,000 ரொக்கம் உள்ளது: ஸ்டாலின் வேட்புமனுவில் அறிவிப்பு
சென்னை:
கையிருப்பாக ரூ.10 ஆயிரம் மட்டுமே ரொக்கம் இருப்பதாகவும், ரூ.6.26 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் இருப்பதாகவும் வேட்புமனுவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அத்துடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம்:
கடந்த ஆண்டு தனக்கு ரூ.30.59 லட்சமும், மனைவி துர்காவுக்கு ரூ.5.33 லட்சமும் வருமானம் கிடைத்ததாக வருமான வரி கணக்கில் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் தற்போது கையிருப்பாக ரூ.10 ஆயிரமும், மனைவி துர்காவிடம் ரூ.40 ஆயிரமும் ரொக்கம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் நகைகள் எதுவும் இல்லை. மனைவி துர்காவிடம் 720 கிராம் நகைகள் உள்ளன. இருவர் பெயரிலும் கார் உட்பட எந்த வாகனங்களும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது பெயரில் ரூ.3.30 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், மனைவி துர்கா பெயரில் ரூ.1.32 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும் என மொத்தம் ரூ.4.62 கோடிக்கு அசையும் சொத்துகள் உள்ளன.
விவசாய நிலம், குடியிருப்பு கட்டிடம் என முதல்வர் ஸ்டாலின் பெயரில், ரூ.2.96 கோடிக்கும், மனைவி துர்கா பெயரில் ரூ.2.11 கோடிக்கும் என ரூ.5.07 கோடி அசையா சொத்துகள் உள்ளன.
மொத்தமாக, அசையும், அசையா சொத்துகள் என ரூ.9.69 கோடி சொத்துகள் உள்ளன. தனக்கும், தனது மனவைிக்கும் கடன்கள் இல்லை. வழக்குகள் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
